உத்தரிக்கும் தல ஆன்மாக்களுக்காக தூய ஜெர்த்துருத் அம்மாளின் செபம்

உத்தரிக்கிற_ஆன்மாக்கள்

என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தை, இன்று உலகம் முழுதும் நிறைவேறிய, இனி நிறைவேறவிருக்கிற எல்லாத் திருப்பலிகளோடும் சேர்த்து உத்தரிக்கும் தல ஆன்மாக்களுக்காகவும், உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களுக்காகவும், திருச்சபையின் ஆன்மாக்களுக்காகவும், எனது குடும்பத்தினரின் ஆன்மாக்களுக்காகவும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன், ஆமென்!

பாரம்பரிய செபம்: ஓ! ஆதியும், அந்தமும் இல்லாத பரம பிதாவே! நான், உமது தெய்வீக குமாரன் இயேசுவின் அதிமிக்க, விலைமதிக்கப்படாத, பரிசுத்த இரத்தத்தைக் கொண்டு, இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிற திவ்ய பலிப்பூசையின் பரிபூரண பலன்களை உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற எண்ணற்ற பரிசுத்த ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுப்பதோடு, எல்லா இடங்களில் இருக்கும் பாவிகளுக்காகவும், உலகம் எத்திசையிலிருக்கும் பாவிகளுக்காகவும், என் வீட்டிலிருக்கும் அனைவருக்காகவும் முழு மன சம்மதத்துடன் ஒப்புக்கொடுக்கிறேன், ஆமென்!

(இந்த செபத்தை புனித ஜெர்த்துருத் அம்மாள் செபிக்கும் போது பல ஆன்மாக்கள் உத்தரிக்கும் தலத்திலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்டார். ஆண்டவர் அவருக்குத் தந்த வாக்குறுதி என்னவெனில், இதை ஒரு முறை செபிக்கையில் குறைந்தது ஆயிரம் உத்தரிக்கும் தல ஆன்மாக்கள் மீட்கப்படுவர் என்பதாம். எனவே, நாமும் இந்தச் செபத்தை தினமும் சொல்வோம்.)