260719 ஞாயிறு: ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு-வா1: சாலமோனின் ஞானம் 12:13, 16-19 | திருப்பாடல் 86:5-6, 9-10, 15-16 | வா2: உரோமையர் 8:26-27 | ந: மத்தேயு 13:24-43.
நிலக்கிழார்: அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், 'முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன்.
260720 திங்கள்: [தூய அப்பொல்லினாரிஸ்]-வா1: மீக்கா 6:1-4, 6-8 | திருப்பாடல் 50:5-6, 8-9, 16ஆஇஈ-17, 21,23 | ந: மத்தேயு 12:38-42.
இயேசு: யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
260721 செவ்வாய்: [பிரிந்திசி நகரின் தூய இலாரன்ஸ்]-வா1: மீக்கா 7:14-15, 18-20 | திருப்பாடல் 85:1-3, 4-5, 6-7 | ந: மத்தேயு 12:46-50.
இயேசு: விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.
260722 அறிவன்: தூய மகதலா மரியா (மரிய மதலேனம்மாள்)-வா1: இனிமைமிகு பாடல் 3:1-4ஆ (அல்லது) 2 கொரிந்தியர் 5:14-17 | திருப்பாடல் 63:1, 2-3, 4-5, 7-8 | ந: யோவான் 20:1, 11-18.மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.
260723 வியாழன்: [தூய பிரிஜித்தம்மாள்]-வா1: எரேமியா 2:1-3, 7-8, 12-13 | திருப்பாடல் 36:5-6அஆ, 7-8, 9-10 | ந: மத்தேயு 13:10-17.
இயேசு: உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
260724 வெள்ளி: [தூய சார்பெல் மாக்லுஃப்]-வா1: எரேமியா 3:14-17 | எரேமியா 31:10, 11-12அஆ, 13 | ந: மத்தேயு 13:18-23.
இயேசு: நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள்.
260725 காரி: திருத்தூதர் தூய யாக்கோபு (சந்தியாகப்பர் / ஜேம்ஸ்)--வா1: 2 கொரிந்தியர் 4:7-15 | திருப்பாடல் 126:1-2அஆ, 2இஈ-3, 4-5, 6 | ந: மத்தேயு 20:20-28.
செபதேயுவின் மனைவி தம் மக்களோடு வந்து இயேசுவிடம், "நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்" என்று வேண்டினார்.
260726 ஞாயிறு: ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு-வா1: 1 அரசர்கள் 3:5, 7-12 | திருப்பாடல் 119:57,72, 76-77, 127-128, 129-30 | வா2: உரோமையர் 8:28-30 | ந: மத்தேயு 13:44-52.
இயேசு: விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.