இவ்வார இறைவார்த்தை (260503-260510)

260503 ஞாயிறு: பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு-வா1: திருத்தூதர் பணிகள் 6:1-7 | திருப்பாடல் 33:1-2, 4-5, 18-19 | வா2: 1 பேதுரு 2:4-9 | ந: யோவான் 14:1-12.

இயேசு: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.

260504 திங்கள்: [தூய ஃபுளோரியான்]-வா1: திருத்தூதர் பணிகள் 14:5-18 | திருப்பாடல் 115:1-2, 3-4, 15-16 | ந: யோவான் 14:21-26.

இயேசு: என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.

260505 செவ்வாய்: [தூய நெக்டாரியஸ்]-வா1: திருத்தூதர் பணிகள் 14:19-28 | திருப்பாடல் 145:10-11, 12-13, 21 | ந: யோவான் 14:27-31ஆ.

இயேசு: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.

260506 அறிவன்: [அரு. எட்வர்ட் ஜோன்ஸ்]-வா1: திருத்தூதர் பணிகள் 15:1-6 | திருப்பாடல் 122:1-2, 4-5 | ந: யோவான் 15:1-8.

இயேசு: நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.

260507 வியாழன்: [தூய பிளாசிட்]-வா1: திருத்தூதர் பணிகள் 15:7-21 | திருப்பாடல் 96:1-2அ, 2ஆ-3, 10 | ந: யோவான் 15:9-11.

இயேசு: என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.

260508 வெள்ளி: [தூய அட்ரியான்]-வா1: திருத்தூதர் பணிகள் 15:22-31 | திருப்பாடல் 57:7-8, 9-11 | ந: யோவான் 15:12-17.

இயேசு: நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

260509 காரி: [தூய வின்சென்ட்]-வா1: திருத்தூதர் பணிகள் 16:1-10 | திருப்பாடல் 100:1-2, 3, 5 | ந: யோவான் 15:18-21.

இயேசு: உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது..என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.

260510 ஞாயிறு: பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு-வா1: திருத்தூதர் பணிகள் 8:5-8, 14-17 | திருப்பாடல் 66:1-3அ, 4-5, 6-7அ, 16,20 | வா2: 1 பேதுரு 3:15-18 | ந: யோவான் 14:15-21.

இயேசு: உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

புதிதாய்.. இனிதாய்..!

அன்புக் கடவுள் அருளிய செய்தி

Read more

இவ்வார அருள்வாக்கு: இயேசுவின் சாட்சியாவோம்..தந்தைக்கு மாட்சி தருவோம்.. !

இயேசு: நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்

யோவான் 15:8-9