உத்தரிக்கும் தல ஆன்மாக்களுக்காக மன்றாட்டு மாலை (உத்தரிக்கும் ஸ்தல ஆத்துமாக்கள் பிரார்த்தனை)

முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்லோரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய ஆவியாராகிய இறைவா!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய மரியே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இறைவனுடைய புனித மாதாவே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கன்னியர்களுக்குள்ளே உத்தம புனித கன்னிகையே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித மிக்கேலே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தூதரும், அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: புனித ஸ்நாபக அருளப்பரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித சூசையப்பரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளுமாகிய சகல புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: புனித இராயப்பரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித சின்னப்பரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித அருளப்பரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அப்போஸ்தலரும், சுவிசேஷகருமாகிய சகல புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: புனித முடியப்பரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித இலவுரேஞ்சியாரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: வேதசாட்சிகளான சகல புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: புனித கிரகோரியாரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித அமிர்த நாதரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித அகுஸ்தீனாரே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: புனித எரொணிமுசே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மேற்றிராணிமார்களும், ஸ்துதியர்களுமாகிய புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: வேத வித்யாபாரகரான சகல புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: குருக்களும், ஆசிரியர்களுமான புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: சந்நியாசிகளும், தபோதனர்களுமான புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: புனித மரிய மதலேனே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித கத்தரீனாளே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித பார்பரம்மாளே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கன்னியாஸ்த்ரீகளும், விதவைகளுமாகிய புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல புனிதர்களே!
எல்: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: தயாபரராயிருந்து
எல்: அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும், சுவாமி!
முத: தயாபரராயிருந்து
எல்: எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும், சுவாமி!
முத: சகல பொல்லாப்புகளிலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: உமது கோபத்திலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: உமது நீதி அகோரத்திலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: பிசாசின் வல்லமையிலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: கொடூர வியாகுலத்திலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: கொடிய ஆக்கினையிலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: அக்கினிச் சுவாலையிலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: துயரமான அழுகையிலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: உத்தரிக்கிற ஸ்தலத்துச் சிறைச் சாலையிலே நின்று!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய திரு மனுஷ அவதாரத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும், பிறப்பையும் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய ஞானஸ்நானத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய உபவாசத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய கிருபையின் மிகுதியையும், அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும், நிர்ப்பந்தங்களையும் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய கட்டுண்ட கட்டுக்களைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய அடிகளைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய திருச் சிலுவையைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய கொடூரமான மரணத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: எங்கள் மரணத்தை ஜெயித்து அழித்த தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய விலை மதியாத திரு இரத்தத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேவரீருடைய அதிசயமான ஆரோகணத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: தேற்றரவு பண்ணுகிறவராகிய தூய ஆவியாரின் ஆகமனத்தைப் பார்த்து!
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: நடுத்தீர்க்கிற நாளிலே
எல்: அவர்களை மீட்டருளும், சுவாமி!
முத: பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும், நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: மரணத்தின் திறவுகோலையும், நரகத்தின் திறவுகோலையும் கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: இரட்சணியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: எங்கள் சகோதர, பந்துக்கள், உபகாரிகளுடைய ஆன்மாக்களை உத்தரிக்கிற தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆன்மாக்களுக்கும் தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: கிறிஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும், பிரகாசமும், சமாதானமும் உள்ள தலத்தைக் கட்டளையிட தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: அவர்கள் துயரைச் சந்தோசமாக மாற்றி அருள தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: அவர்களுடைய ஆசை நிறைவேற தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: அவர்கள் உம்மைப் புகழ்ந்து, ஸ்துதிப் பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: உம்முடைய அர்ச்சிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: கிருபையின் ஊரணியே தேவரீரை மன்றாடுகின்றோம்!
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும், சுவாமி!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எல்: அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எல்: அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எல்: அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும்!
முத: நரக வாசலில் நின்று
எல்: அவர்களுடைய ஆன்மாக்களை மீட்டு இரட்சித்தருளும்!
முத: அவர்கள் நித்திய சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக.
எல்: அப்படியே ஆகக்கடவது!
முத: சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: எங்கள் அபயச் சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.
செபிப்போமாக! எங்கள் அனைவரையும் படைத்துப் பராமரித்து மீட்ட அன்பு இறைவா! மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடு வேண்டும் பாவ மன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.
எக்காலமும் வாழும் உயிருள்ள இறைவா, இந்த மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும், சுவாமி. ஆமென்.
நித்திய பிதாவே! பெற்றோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், உபகாரிகள் ஆகியோரைத் நல்ல விதமாய் நேசித்து, அவர்களுக்கு வேண்டிய நன்மையைச் செய்தருள கற்பித்தருளினீரே! ஆகையால் எங்களைப் பெற்று, அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும், பற்பல உபகாரங்கள் எங்களுக்குச் செய்தவர்களும், எங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், உபகாரிகள் ஆகியோர்களும் வேதனை நீங்கி, நித்திய காலம் உம்மை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம், ஆமென்!
முத: மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்வோமாக!
நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்கு அளித்தருளும் ஆண்டவரே!
எல்: முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக!
கிருபை தயாபத்து மந்திரம்
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க!
எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க!
பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம்.
இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.
இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும்.
கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே!
முத: இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
எல்: சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், ஆமென்!
செபிப்போமாக!
சர்வ சக்தியுடையவருமாய், நித்தியருமாய் இருக்கிற இறைவா!
முத்திப்பேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும், சரீரமும் தூய ஆவியின் அனுக்கிரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள், அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே, இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும், நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும், ஆமென்!
+++நிறைவு+++