தவக்கால மனவல்ய செபங்கள்

01. “இயேசுவே! என் மேல் இரக்கமாயிரும்!”

02. “இயேசுவே! நான் பாவி. இயேசுவே! உம் இரத்தம் என்னைக் கழுவட்டும்; உம் பாடுகள் என்னைத் தேற்றட்டும்.”

03. “இயேசுவே! உம் தழும்புகளால் நான் குணமாகிறேன், நன்றி!”

04. “இயேசுவே! தாவீதின் மகனே, பாவி என்மீது இரக்கம் வையும்!”

05. “இயேசுவே! என்னை இரட்சியும்!”

06. “இயேசுவே! என் நம்பிக்கையெல்லாம் உங்கள் பெயரில் வைக்கிறேன்.”

07. “இயேசுவின் இரத்தம் ஜெயம்”

08. “என் தேவனே! நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன், நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்க்காகவும், உம்மை நேசியாதவர்க்காகவும் மன்னிப்பு கேட்கிறேன்.“

09. “இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும்.”

10. “இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே! என் இருதயத்தை தேவரீருடைய இருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்.”

 

வாசல்