அவஸ்தையாயிருக்கிற ஆத்துமங்களுக்காக செய்யத்தகும் சுகிர்த ஜெபம்

உத்தரிக்கிற_ஆன்மாக்கள்

கருணாம்பர இயேசுவே, ஆன்மாக்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய திவ்விய இருதயமானது, பூங்காவனத்திலும், சிலுவையிலும் பட்ட மரண அவஸ்தையையும், தேவரீருடைய மாசில்லாத திருத் தாயானவள் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து, இன்று தானே பூமியெங்கும் அவஸ்தையாய்க் கிடந்து சாகப் போகிறப் பாவிகளைத் தேவரீருடைய திரு இரத்தத்தினாலே சுத்திகரித்தருளும். மரண அவஸ்தைப்பட்ட இயேசு நாதருடைய திவ்விய இருதயமே! இன்று மரிக்கிறவர்களின் பேரில் இரக்கமாயிரும், ஆமென்!