உத்தரிக்கும் தல ஆன்மாக்களுக்காக இயேசுவிடம் செபம்!

திவ்விய இயேசுவே! உத்தரிக்கும் தலத்தின் ஆன்மாக்கள் பேரில் இரக்கமாயிரும்.
தாவீது அரசரின் புத்திரனாகிய இயேசுவே! சிலுவைப் பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து, உத்தரிக்கும் தலத்தின் ஆன்மாக்கள் பேரில் இரக்கமாயிரும்.
சுவாமி, தேவரீர் அன்று சிலுவையில் பலியாகும் போது உமக்காக வருந்திய கள்ளனுக்குக் கிருபை புரிந்தது போல, இந்த ஆன்மாக்கள் பேரில் இரக்கமாயிருந்து, அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையின் பாக்கியத்தில் சேர்த்தருளும். அங்கே எல்லாப் புனிதர்களோடும், வானகத் தூதரணிகளோடும் அவர்கள் எக்காலமும் தேவரீரை வாழ்த்தி, துதித்துக் கொண்டிருப்பார்களாக, ஆமென்!
விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே! உத்தரிக்கும் தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்களுக்காக திவ்விய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.
சுவாமி, பரிசுத்தரே! சர்வ வல்லப பரிசுத்தரே! அட்சயரான பரிசுத்தரே! எங்கள் மேல் இரக்கமாயிரும், சுவாமி!
பாவிகளுக்குப் பொறுத்தலைத் தந்தருளும், சுவாமி!
மரித்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிடும், சுவாமி, ஆமென்!
