உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போகாமல் மோட்சம் செல்ல உதவக்கூடிய பரிகார ஒப்புக்கொடுத்தல் ஜெபம்

உத்தரிக்கிற ஆன்மாக்கள்

நித்திய பிதாவே! இன்றைய தினத்திலும், என் ஜீவிய காலம் முழுவதும் நான் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்குப் பரிகாரமாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே! இன்றைய தினத்திலும், என் ஜீவிய காலம் முழுவதும் நான் குற்றங்குறைகளோடு செய்த நன்மையைச் சுத்திகரிப்பதற்காக சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நித்திய பிதாவே! இன்றைய தினத்திலும், என் ஜீவிய காலம் முழுவதிலும் நான் செய்யத்தவறிய நன்மைகளுக்கு ஈடாக, சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன், ஆமென்!