உத்தரிக்கிற ஆன்மாக்களும், உத்தரிய மாதாவும்
Mother Mary Helping Souls in Purgatory

மிகவும் பரிசுத்த கன்னி மரியாளே! உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள் பேரில் இரக்கம் மிகுந்த தேற்றரவு மாதாவே!
அடியேன் இதோ உமது பாதத்திலே சாஷ்டாங்கமாய் விழுந்து, பிரார்த்தித்து, ஒப்புக் கொடுக்கும் காணிக்கை என்னவென்றால்,
என் அனுதினக் கிரியையினாலே நான் அடையக் கூடிய பேறு பலன்களையும், என் மரணத்திற்குப் பின் எனக்காக ஒப்புக்கொடுக்கும் ஜெப, தவப் பலன்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

மரித்த விசுவாசிகளின் ஆத்துமங்களின் நன்மைக்காக, தேவரீர் சித்தம் போல் அவைகளைப் பிரயோகிக்கக் கிருபை புரிந்தருளும்.

தற்காலத்திலும் பிற்கால நித்தியத்திலும் எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களை எல்லாம் சுயநல நாட்டமின்றி தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே முழுதும் ஒப்படைத்து விடுகிறேன்.

உமது திருக்குமாரனாகிய ஆண்டவர் தமது கிருபை, இரக்கத்துக்கு, அல்லது நீதிக்கேற்றபடி உமது திருக்கரங்களின் வழியாய், அடியேனுக்கு நியமித்து அனுப்பும் நன்மை தின்மைகளை எல்லாம் மனப் பூரணமான அமைதலோடு இப்போதே கையேற்றுக் கொள்கிறேன், ஆமென்!