நம் ஆண்டவரும், மீட்பருமான இயேசு கிறித்துவின் இணையில்லாத் திருப்பெயரால் உங்களை வாழ்த்தி, இப்புதிய இணைய தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!
இவ்வார இறைவார்த்தை (260531-260607)
260531 ஞாயிறு: மூவொரு இறைவன் ஞாயிறு / தமதிரித்துவப் பெருவிழா-வா1: விடுதலைப் பயணம் 34:4ஆ-6, 8-9 | தானியேல் (இணைப்பு) 1:29அஇ, 30,31, 32,33 | வா2: 2 கொரிந்தியர் 13:11-13 | ந: யோவான் 3:16-18.
தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
260601 திங்கள்: தூய ஜஸ்டின்-வா1: 2 பேதுரு 1:1-7 | திருப்பாடல் 91:1-2, 14-15அஆ, 15இ-16 | ந: மாற்கு 12:1-12.
திராட்சைத் தோட்ட உரிமையாளர் இறுதியாக அவருடைய அன்பு மகனை தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். அவர்களோ அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
260602 செவ்வாய்: [தூயோர் மர்சில்லினஸ் & பீட்டர்]-வா1: 2 பேதுரு 3:12-15அ, 17-18 | திருப்பாடல் 90:2, 3-4, 10, 14,16 | ந: மாற்கு 12:13-17.
இயேசு: சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.
260603 அறிவன்: தூய சார்லஸ் லுவாங்கா மற்றும் தோழர்கள்-வா1: 2 திமொத்தேயு 1:1-3, 6-12 | திருப்பாடல் 123:1-2அ, 2ஆஇஈ | ந: மாற்கு 12:18-27.
இயேசு: அவர் இறந்தோரின் கடவுள் அல்லர்; மாறாக, வாழ்வோரின் கடவுள்.
260604 வியாழன்: [தூய ஃபிரான்சிஸ் கராச்சியோலோ]-வா1: 2 திமொத்தேயு 2:8-15 | திருப்பாடல் 25:4-5அஆ, 8-9, 10,14 | ந: மாற்கு 12:28ஆ-34.
இயேசு: உன் ஆண்டவராகிய கடவுளிடமும், அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவது எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது.
260605 வெள்ளி: தூய போனிஃபாஸ்-வா1: 2 திமொத்தேயு 3:10-17 | திருப்பாடல் 119:157,160, 161,165, 166,168 | ந: மாற்கு 12:35-37.
நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்.
260606 காரி: [தூய நார்பர்ட்]-வா1: 2 திமொத்தேயு 4:1-8 | திருப்பாடல் 71:8-9, 14-15அஆ, 16-17, 22 | ந: மாற்கு 12:38-44.
இயேசு: இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.
260607 ஞாயிறு: கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம்-வா1: இணைச்சட்டம் 8:2-3, 14ஆ-16அ | திருப்பாடல் 147:12-13, 14-15, 19-20 | வா2: 1 கொரிந்தியர் 10:16-17 | ந: யோவான் 6:51-58.
இயேசு: எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்.
புதிதாய்.. இனிதாய்..!
அன்புக் கடவுள் அருளிய செய்தி
Read moreஇவ்வார அருள்வாக்கு: இயேசுவை உண்போம்.. இயேசுவாய் வாழ்வோம்!
இயேசு: விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்
