முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்.
முத: விண்ணகத் தந்தையாகிய இறைவா!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகை மீட்ட திருமகனாகிய இறைவா!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய ஆவியாராகிய இறைவா!
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: மூவொரு கடவுளாகிய இறைவா! எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகிலுள்ள அனைத்தையும் படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: வானதூதர்களை படைக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: கடவுளின் எல்லா வல்லமைகளையும் மனிதருக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: உலகம் முழுவதையும் ஆண்டு நடத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: மூவொரு இறைவனின் தூய மறை உண்மைகளை எங்களுக்கு வெளிப்படுத்தக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: உலகத்தை மீட்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: எங்களை தினமும் தூய்மைப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: எங்களுக்கு நிலைவாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: நாங்கள் அடையவிருக்கும் தண்டனைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டு, தூக்கி எடுக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: மனித அவதாரத்தையும், பாடுகளையும், இறப்பையும் ஏற்றுக் கொள்ளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: எல்லாருக்கும், எப்பொழுதும், எல்லா இடங்களிலும் உதவி அளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: தெய்வீக மறை உண்மைகளை எங்களுக்கு வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: உண்மையான திரு அவையை நிறுவிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: அருட்சாதனங்களை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: திருமுழுக்கிலும், ஒப்புரவிலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: திவ்விய நற்கருணையிலும், குருத்துவத்திலும் இறை இரக்கத்தைத் தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: பாவிகளை மனம் திருப்புவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: அவிசுவாசிகள் ஒளி பெறுவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: நேர்மையாளர்கள் வாழ்வின் தூய்மையில் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: உமது திருக்காயங்களிலிருந்து வழிந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: உமது மிகத் தூய்மையான திரு இதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களைத் தூய்மைப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: இரக்கத்தின் தாயாகிய கன்னி மரியாவை எங்களுக்குத் தாயாகத் தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: நோயாளிகளுக்கும், துன்பப்படுவோருக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: கலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: இறந்தோரின் அடைக்கலமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: உத்தரிக்கும் தலத்தில் உள்ள ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: எல்லாத் தூயவர்களின் விண்ணகப் பேரின்பமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: மீட்கப்பட்டவர்களின் விண்ணகப் பேரின்பமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* முத: அற்புதங்களின் வற்றாத ஊற்றாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே!* (* எல்: உம் மீது நம்பிக்கை வைக்கிறேன்.) முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே! எல்: எங்கள் பாவங்களை மன்னித்தருளும். முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே! எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியான இயேசுவே! எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்! முத: ஆண்டவருடைய இரக்கம் அவருடைய எல்லா படைப்புகளிலும் உள்ளது. எல்: ஆதலால் ஆண்டவருடைய இரக்கத்தை நான் என்றென்றும் பாடுவேன். முத: செபிப்போமாக! முத: எல்லாம் வல்ல இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மீது விசுவாசமும், நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே! உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து, எங்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லாச் சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க, உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்! எல்: ஆமென்!